ஜாதக கணிதம் – C.G.Rajan

C.G.Rajan – ஜோதிட உலகின் ஜாம்பவான்

C. Govinda Rajan, B.A.(Mathematics)
(Born 5/July/1894)
Retired Tahsildar and Taluk Magistrate., Chiglepet district

Govinda Rajan graduated in Mathematics and had a passion for Astrology. He undertook extensive research on Indian astrology and Western astronomy, and revived Indian Astrology tables.

Rajan has written more than 40 books – சித்தாந்த ராஜ சிரோமணி, டேபிள்ஸ் ஆப் பாவாஸ், ஜாதக கணிதம், பிருஹத் ஜாதகம், பராசர ஓரை etc. just to name a few.

C.G.Rajan was தமிழ் பஞ்சாங்கங்களின் பிதாமகர். He was the கணித ஆசிரியர் for

  • ஆனந்தபோதினி சுத்த திருக்கணித பஞ்சாங்கம் (வாசன் பஞ்சாங்கம்)
  • தென்னாட்டு வாக்கிய பஞ்சாங்கம்
  • நாமகள் சுத்த திருக்கணித பஞ்சாங்கம்

Check out: http://logicastro.com/pioneers/c-g-rajan.html


இப்புத்தகம் என்னுடைய “ஜாதக களிதம் என்னும் ஜோதிட கிரக சட்பலம் ஆயுள் கனிதம்” என்ற புத்தகத்தினுடைய இரண்டாம் பாகம் ஆகும். “ஜாதக கணிதம்” என்ற புத்தகத்தில் சொல்லியுள்ள பிரகாரம் கணித்து வரும் கிரக சட்பலத்தையும் பாவ பலத்தையும் அனுசரித்து பலா பலன்கள் இப்புத்தகத்தில் நிர்ணயஞ் செய்யப் பட்டிருக்கின்றன. மேலும் ஜாதக கணிதம் பிரகாரம் கிரக சட்பலம், பாவ பலம் முதலியவைகளைக் கணிக்கச் சந்தற்பப்படாத போது சாதாரண வழி பிரகாரம் கிரகங்களின் பலத்தை யூகித்து பலாபலன் நிர்ணயஞ் செய்யும் மார்கத்தையும் கொடுத்திருக்கிறது. மிகவும் புராதீனமான சிறந்த கிரந்தங்களில் கொடுக்கப் பட்டுள்ள விஷயங் களில் மிகவும் அவசியமாயும் சிறந்ததாயும் உள்ள விஷயங்களையும் விதிகளையும் இப்புத்தகத்தில் கொடுக்கப் பட்டிருக்கின்றன. பலா பலன்களைச் சொல்ல வேண்டுமானால் இப்புத்தகத்தில் 208-வது 200 வது பக்கங்களில் கண்டுள்ள பிரகாரம் பல அம்சங்களையும் ஆசாய்ச்சி செய்து யோசனை செய்து யூகித்து சாமர்த்தியமாய்ச் சொல்ல வேண் டும். பலவிதமாய் ஆராய்ச்சி செய்யும்போது ஏற்படும் பலன்களை எல் லாம் ஒரு காகிதத்தில் தனித்தனியாய் எழுதிக்கொண்டு பிறகு இந்தக் தனித்தனி பலன்களை ஒன்றாகச் சேர்த்து அவைகளால் ஏற்படும் நிகரப் பலனை யோசித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக, ஒருகிரகத்தின் தனிப்பலன் ஜாதகன் சிகப்புநிறமுள்ளவன் என்றும் இன்னொரு கிரகத்தின் தனிப்பலன் ஜாதகன் கறுப்பு நிறமுள்ளவன் என்றும் ஏற்பட்டால் இவ்விரண்டு தனிப் பலன்களையும் ஒன்றாய்ச் சேர்க்க வருகின்ற சிகப்பும் கறுப்பும் கலந்த மாகிறம் என்ற நிகா பலன் ஏற்படும். இவ்விதமாகவே ஒரு கிரகத்தின் தனிப் பலனால் ஜாதகன் தனவான் என்றும் இன்னொரு கிரகத்தின் தனிப்பலனால் ஜாதகன் ஏழை என்றும் ஏற்படுமானால் இவ்விரண்டு தனிப் பலன்களை யும் ஒன்றாய்ச் சேர்த்துக் கவனிக்க ஜாதகன் தனவத்தனாயும் எழையு மாயும் இல்லாமல் ஈடுத்தர நிலையில் இருப்பான். இவ்விதமாகவே ஒவ் வொரு பலனையும் நிகாப் பலனைக் கொண்டு அறிய வேண்டும். இப்புத்தகத்தில் எழுத்துப் பிழை, சொற்பிழை முதலியவைகளிருந்தால் அவைகளை மன்னித்து இதிலுள்ள சாராம்சத்தை ஏற்றுக்கொண்டு இந்தப் புத்தகத்தை ஆமோதிக்கும்படியாய் இதை வாசிக்கும் பெரி போர்களையும் சிறியோர்களையும் வணக்கத்துடன் கேட்டுக்கொள்ளு கிறேன்.


Contents:


ஜாதக பலாபல நிர்ணயம்

ஜோதிட சாஸ்திரத்தைச் சகலரும் அறியும் வண்ணம் திறமையும், கீர்த்தியுமுள்ள பல நிபுணர்கள் சோதிட சாஸ்திரத்தைப் பற்றிப் பல சிரந்தங்கள் எழுதி இருக்கின்றார்கள். ஆயினும் இப்படிப் பட்ட பல கிரந்தங்களைப் படித்தும் பலாபலன் நிர்ணயஞ்செய்யும் விதம் தெரி யாமல் அனேகர் தடுமாறுவதால் அடியேன் என்னுடைய சுமார் இரு பது வருஷத்திற்கு மேற்பட்ட அனுபோகத்தை அனுசரித்துப் பலா பலன் நிர்ணயஞ்செய்யும் மார்க்கத்தைச் சோதிட சாஸ்திரமாகிய ஒரு மகா சமுத்திரத்தைக்கடக்க ஒரு சிறிய படகுபோன்ற இந்தப் புத்தகத்தில் சொல்லத்துணிகின்றேன்.


Previous owner?
L.Raghavaiyangar (?)

SEAL
The Madras City
Civil Court
11(?) March 1942
Design a site like this with WordPress.com
Get started