நற்றிணை (நல்+திணை)

நற்றிணை என்பது தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை என்ற சங்க இலக்கிய வகைப்பாட்டினுள் காணப்படும் ஒரு நூலாகும். இந்நூல் தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப் பின்னர்த் தொகுக்கப்பட்டது. எட்டுத்தொகை நூல்கள் இவையெனக் குறிப்பிடும் பழைய வெண்பாவில் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும்.

எட்டுத்தொகை நூல்களில் “நல்” என்ற அடைமொழி பெற்ற நூல் (நல்+திணை) இதுவேயாகும். இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். இந்நூலில் கடவுள் வாழ்த்தோடு 401 பாடல்கள் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளன.

நற்றிணைப் பாடல்கள் அக்காலச் சமூகத்தை அறியப் பெரிதும் துணைபுரிகின்றன. மன்னர்களின் ஆட்சிச் சிறப்பும், கொடைத்தன்மையும், கல்வியாளர்களின் சிறப்பும், மக்களின் வாழ்க்கை முறையும், நம்பிக்கைகளையும், சடங்குகளையும், மனிதநேயத்தையும், செடிகளையும், கொடிகளையும், பறவை களையும், விலங்குகளையும் நேசித்து தன் அன்பை வெளிப்படுத்துகிற பாங்கைக் கொண்டவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள் பண்டைய மன்னர்கள். குலத்தால் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்கிற ஏற்ற இறக்கம் பார்க்காமலும், சமயசார்பற்ற தன்மையையும், தன்னை நம்பி வந்தவர்களைக் கைவிடாதிருத்தலும், எடுத்துக் கொண்ட செயலை முடித்தே காட்டுகின்ற வீரத்தின் விளைநிலத்துக்கு இலக்கணமாகவும் விளங்கினர் என்பதை நற்றிணை அகப்பாடல்களில் பல்வேறு இடங்களில் இத்தகைய பெருமைகளைப்பற்றி பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பல்லி கத்தும் ஓசையை வைத்து சகுனம் பார்க்கும் வழக்கத்தை பின்பற்றியிருக்கிறார்கள். கால்பந்து விளையாட்டை பெண்களும் விளையாடியிருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரக் கூற்றுக்கள் இவற்றில் இடம்பெற்றிருக்கின்றன. பிற்காலத்தில் சிறந்து விளங்கிய “தூது” என்ற சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருகு (பறவை) கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும் பாங்கினையும் நற்றிணைப் பாடல்கள் வாயிலாக நிரம்பக் காணலாம். நற்றிணைப் பாடல்களை வாசிக்கும் போது, மனதில் ரீங்காரமிட்டு பறக்கும் பறவைகளின் சிறகுகளைப் பெற்று பறப்பதைப் போன்ற உணர்வுகள், நம் உள்ளத்தில் ஊடுருவும்.

ஆணும் பெண்ணும் ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்பட்டிருந்தால் ‘கைக்கிளை’ எனவும், இருவரும் ஒருவருக்கொருவர் காதல் பரிமாறி இல்வாழ்வு அமைப்பதை ‘களவு’ எனவும், இருவரும் இணைந்து மணவாழ்வில் கலந்து மக்கள் பேறைப் பெற்று, விருந்தோம்பலில் சிறந்து விளங்கி, பொருளீட்டலில் வாழ்வை நிறைவு செய்து இறை அச்சத்தையும், வாழ்வின் மீதான உச்சத்தையும் தொடுவது ‘கற்பு’ என்கிற நெறி சார்ந்த வாழ்வுதான் ஆதாரம் என்பதை நமக்கு பளிச்சென படம் பிடித்துக் காட்டினர்.


பதிப்பு வரலாறு

எட்டுத்தொகை நூல்களில் பழைய உரை இல்லாத ஒரே நூலான நற்றிணை என்னும் இந்நூல் முற்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் என்னும் தமிழறிஞர் இந்நூலின் பல சுவடிகளைத் தேடிக் கண்டறிந்து ஒப்பிட்டு ஆய்வுசெய்து முதன்முதலில் புத்துரையுடன் 1915-ம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார். இப்பதிப்பிற்குப் பின்னர் வேறு பல தமிழ்ச் சான்றோரும் உரையுடன் பதிப்பித்து வெளியிட்டுள்ளனர்.”

One of the things I love about buying an old book is that you can see the previous owner(s) notes…

குறிஞ்சித் திணை –  புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

முல்லைத் திணை – இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

மருதத் திணை – ஊடலும் ஊடல் நிமித்தமும்

நெய்தற்  திணை – இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

பாலைத் திணை – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்


மருதத் திணையில் அடிக்கடி வரும் சொற்கள்:  வயல், பழனம் (pond), கழனி,  குளம், வாளை மீன், வாகை மீன், கெண்டை மீன் , ஆமை, உழவர், அரிநர், நெல், மாமரம், ஞாழல் மரம், நொச்சி மரம், கரும்பு, நீர்நாய்  (otter), ஆம்பல் (white waterlily), தாமரை, பொய்கை, கயம் (pond), குருவி, கோழி, சேவல்,  கழனி, கொக்கு, காரான் (buffalo), காஞ்சி மரம்,  மருத மரம், அத்தி மரம்,  கரும்பு, குளம்,  தாமரை மலர், எருமை,  பொய்கை, ஆம்பல், முதலை, களவன் (நண்டு)

குறிஞ்சித் திணையில் அடிக்கடி வரும் சொற்கள்:  வரை (mountain),  மலை, குன்று, சாரல் (mountain slope), அடுக்கம் (mountain range), கிளி,   ஏனல் (தினை), அவணை (millet field),  தினை,  இறடி (millet),  இருவி (millet stubble), தாள் (stubble), குரல் (millet spikes),  தட்டை (stubble) – and also bamboo rattle to chase parrots – வெதிர் புனை தட்டை, குளிர், தழல் (gadgets used to chase parrots), கவண், தினை, புனவன் (mountain farmer),  குறவன்,  கானவன், கொடிச்சி, கழுது, இதண், மிடை  (Platform in the millet field), ஓப்புதல் (chase parrots and other birds that come to eat the grain),  கொடிச்சி, யானை, குரங்கு, மஞ்ஞை (peacock), புலி,  பாம்பு, பன்றி (wild boar), வரை ஆடு,  அருவி, சுனை, பலாமரம், பலாப்பழம், சந்தன மரம், மா மரம், பணை (bamboo), வேங்கை மரம், அகில் மரம், மாமரம்,   குறிஞ்சி, குவளை, காந்தள், தேன், வண்டு, சுரும்பு, ஞிமிறு, தும்பி (honeybee), மஞ்சு,  மழை (word is used for both cloud and rain),  பெயல் (rain), ஐவனம் (wild rice)

நெய்தற் திணையில்  அடிக்கடி வரும் சொற்கள் –   கடல், கடற்கரை, பரதவர், மீன், சுறா, முதலை, திரை (wave), அலை, கானல் (கடற்கரை சோலை),  திமில் (boat), அம்பி (boat), சேரி (settlement) , புன்னை, ஞாழல், தாழை, கைதல், கைதை (screwpine),   உப்பு, உமணர் (salt merchant), உப்பங்கழி (salty land), மணல், எக்கர் (மணல் மேடு), அலவன் (நண்டு), அடும்பு (a creeper with beautiful pink flowers), நெய்தல் ஆம்பல் (white waterlily), கோடு, வளை (conch shell), வலை, குருகு, நாரை, அன்றில்

முல்லைத் திணையில் அடிக்கடி வரும் சொற்கள் – புறவு (முல்லை நிலம்), இரலை மான், முயல், ஆ (பசு), கன்று, மழை, முல்லை, காயா, கொன்றை, தோன்றல், தேர், பாகன், மாரி, பித்திகம், கோவலர், ஆயர் (cattle herders), ஆடு, குழல், மஞ்ஞை (peacock),  குருந்தம், மழை,  மான், முயல்

பாலைத் திணையில்  அடிக்கடி வரும் சொற்கள்  –  அத்தம் (harsh path), சுரம் (wasteland), எயினர் (tribes living in the wasteland), பல்லி, ஓதி, ஓந்தி (big garden lizard), பாதிரி (summer blooming flower), கள்ளி (cactus), யா மரம், ஓமை மரம், குரவம், கள்ளிச்செடி, கோங்கு மரம்,  ஞெமை, இருப்பை மரம், வேம்பு, யாமரம், உகாய், கழுகு, கடுஞ்சுரம், அருஞ்சுரம் (harsh wasteland), செந்நாய் (red fox), யானை, புலி, மூங்கில், பதுக்கை (leaf heap, usually a shallow grave), நெல்லி, நெறி (path), ஆறு (path), வேனிற்காலம்,  பரல் கற்கள், இறத்தல் (கடப்பது)

Source: https://learnsangamtamil.com/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started