The famous Murray எஸ். ராஜம் Editions…

Previously, when I bought “Tolkappiyam” I came to know about Murray S.Rajam and how great a work he had done to make available the classics to the people for discounted price but with high quality editions, which are still considered as a reference

In this post let us look more in detail the Murray S.Rajam editions and why the editions are highly valued by the scholars….!


எஸ். வையாபுரிப்பிள்ளை

. வையாபுரிப் பிள்ளை (எஸ். வையாபுரிப் பிள்ளை, 1891 –1956இருபதாம் நூற்றாண்டின் முதன்மை தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக் கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை,கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் எனப் பல்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். 


During my last visit to Moore Market I was luckily to find a first edition of Vaiyapuri Pillai’s Illakkiya Udhayam (1952)

ராஜத்திற்கு 1940களில் பெ. நா. அப்புசாமி மூலமாகப் எஸ். வையாபுரிப்பிள்ளையின் தொடர்பு கிடைத்தது. வையாபுரிப்பிளையின் ஆலோசனையினால் தமிழிலக்கியங்களை மலிவுப்பதிப்பில் வெளியிடும் நோக்கத்துடன் ராஜம் வையாபுரிப்பிள்ளையை பதிப்பாசிரியராகக் கொண்டு பதிப்புப் பணிகளை தொடங்கினார்.


The famous editorial board!

  • S. வையாபுரிப்பிள்ளை,
  • பெ. நா. அப்புசாமி,
  • மு. சண்முகம் பிள்ளை,
  • வி. மு. சுப்பிரமணிய ஐயர், 
  • பி . ஸ்ரீ ஆச்சார்யா, 
  • கி . வா. ஜகந்நாதன், 
  • தெ. பொ. மீனாட்சிசுந்தரம்,
  • ரா.பி. சேதுப்பிள்ளை.

முதலான தமிழறிஞர்களை உள்ளடக்கிய ஆசிரியர் குழுவைக் கொண்டு சாந்தி சாதனாவால் பழந்தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் என்று 40 க்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தரமான அச்சில் மலிவு விலையில் வெளியிடப்பட்டன.



மர்ரே நிறுவனப் பதிப்புகள்:

1955   

  • ஸ்ரீதிவ்யப் பிரபந்தம் _ முதலாயிரம்

1956   

  • ஸ்ரீதிவ்யப் பிரபந்தம் _ திருவாய் மொழி,
  • இயற்பா,
  • பெரிய திருமொழி

1957   

  • நற்றிணை,
  • குறுந்தொகை,
  • ஐங்குறு-நூறு,
  • பதிற்றுப்பத்து,
  • பரிபாடல்,
  • கலித்தொகை,
  • பத்துப்பாட்டு,
  • பதினெண்கீழ்க்கணக்கு (முதல் தொகுதி),
  • திருவாசகம்,
  • கல்லாடம்,
  • சிலப்பதிகாரம்,
  • மணிமேகலை,        
  • கலிங்கத்துப்பரணி,
  • அஷ்டபிரபந்தம்.

1958   

  • அகநானூறு,
  • புறநானூறு,
  • பாட்டும் தொகையும்,
  • கம்பராமாயணம் _ பாலகாண்டம் (தொகுதி_1), அயோத்தி காண்டம் (தொகுதி_2), ஆரணிய காண்டம் (தொகுதி_3), கிட்கிந்தா காண்டம் (தொகுதி_4), சுந்தர காண்டம் (தொகுதி_5).

1959   

  • பதினெண்கீழ்க்கணக்கு (தொகுதி_2),
  • கம்பராமாயணம்_யுத்தகாண்டம் (1/நான்கு தொகுதிகள்),
  • வில்லிபாரதம் (1/நான்கு தொகுதிகள்),
  • அருங்கலச்செப்பு,
  • அறநெறிச்சாரம்,
  • குலோத்துங்க சோழன் உலா,
  • நந்திக்கலம்பகம்,
  • நீதிக்களஞ்சியம் (ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வாக்குண்டாம், நல்வழி),
  • முக்கூடற்பள்ளு,
  • நளவெண்பா.

1960   

  • தொல்காப்பியம்,
  • குற்றாலக் குறவஞ்சி,
  • சாசனவிளக்கம்,
  • சந்தி குறியீட்டு விளக்கம்.

The Unpublished…

ஆசிரியர் குழுவால் பரிசோதித்துச் சந்தி பிரித்து இன்றுவரை வெளியிடாமல் உள்ளவை:

இலக்கியம் : சீவகசிந்தாமணி, சூளாமணி, பெருங்கதை, நீலகேசி, யசோதர காவியம், முத்தொள்ளாயிரம்.

சிற்றிலக்கியம் : பாண்டிக்கோவை, மூவருலா, தக்கயாகப்பரணி, திருநாரையூர் நம்பி மேகவிடு தூது, விறலிவிடு தூது, திருக்கலம்பகம், திருவருணைக் கலம்பகம், மதுரைக்கலம்பகம், அழகர்கலம்பகம், திருவாமாத்தூர்க் கலம்பகம்.

பக்தி இலக்கியம் : திருக்கோவையார், திருவிசைப்பா, திருமந்திரம், பதினோராம் திருமுறை, கோயிற்புராணம், திருக்கடைக்காப்பு, தேசிகப்பிரபந்தம், ஸ்ரீமத் வேதாந்த தேசிகரின் அவதாரப்ரகாரம், வார்த்தமாலை.

இலக்கணம் : நன்னூல், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, நம்பியகப்பொருள், புறப்பொருள்வெண்பாமாலை, தண்டியலங்காரம், நேமிநாதம், வீரசோழியம், இறையனாரகப்-பொருள், பன்னிருபாட்டியல், வெண்பாப்-பாட்டியல், தமிழ்நெறிவிளக்கம்.

Imagine how great and fulfilling it would be if those unpublished are published…


Next time I go to Murray & Co, I will check with them about unpublished manuscripts and what it would take to publish them… 🙏🏾



My collection so far!

பத்து x பத்து = பதிற்றுப்பத்து

Long Story Short!

If you ever come across any S.Rajam edition old books, don’t even think twice! Just go for it!!!


Update:

8/jul/2023: found these copies today…

6 Aug 2023
29nov2023
16Dec2023
02Mar2024

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started