Remembering Dr. தா. வே. வீராசாமி!

டாக்டர் தா .வே. வீராசாமி அவர்கள் இலக்கியத் திறனாய்வு உலகத்தில் தனியிடம் பெற்றுத் திகழ்பவர்கள். பழந்தமிழ் இலக்கியங்கள் மட்டு மல்லாது அண்மைக் காலத்தில் அன்றன்று பூத்துவரும் புதுமலர்களையும் ஆய்ந்து, திறன்காட்டி மகிழும் செந்தமிழ்ப் பேராசிரியர். எதையும் நுட்பமாகப் பார்த்து, செவ்விய தீர்ப்பு வழங்கும் திறனுடையார்“, writes நா.செல்வம் in “நாச்சியப்பன் பாடல்கள்” (1980).


Serendipity?

When we were visiting Hosur (during the summer vacation, en route to Chennai from Coimbatore) my aunt (Akila Chithi) took me through her family tree. As she relived her beautiful memories, she mentioned how she enjoyed reading a lot of books when visiting her uncle’s house, as her uncle used to regularly review books for Sahitya Akademi and other institutions. Her uncle was none other than Dharapuram Venkatachala Veerasami!


The Sahitya Akademi, India's National Academy of Letters, is an organisation dedicated to the promotion of literature in the languages of India. Founded on 12 March 1954.

My aunt continued to say that when the Tamil University was established in Tanjore/Thanjayur, in 1981, he took up a position and contributed to Tamil Literature until his untimely demise in 1997.

That is great to know, but what is serendipity in that?

Well, as soon as my chithi mentioned her uncle worked at the Tamil university I remembered முனைவர் த. தியாகராசன் (BT’s father) had completed his PhD at the same University in the 1990s. So, after the conversation, I called Dr Thiyagarajan to say hi and check if he knew Dr Veerasami…

This is where it got interesting!

BT’s father said “yes, I had met the seasoned scholar a few times and enjoyed conversing with him. The first time when I met him, I had just joined the PhD program at the Tamil University and I was exploring topics for doctoral research. Dr Veerasami suggested I should search, research, and take up a good and worthy topic and one should not do a PhD for PhD’s sake. He suggested that when I shortlist a few good research areas, then we could connect again to explore further the research potential. The second time I met him, I had shortlisted 12 research topics and during the conversation, Veerasami said he did his doctoral research in Periyapuranam and suggested why not take up that itself!” He continued, “that is how I took up Periyapuranam as the research area and worked on analyzing the social conditions as portrayed in the classic.” Thiyagarajan successfully wrote his thesis on Periyapuranam, defended it and was awarded a PhD in 1996!


“முனைவர் தா. வே. வீராசாமி ஐயா ஒரு பழுத்த பேரறிஞர்!

முனைவர் த. தியாகராசன்


That said, how interesting is it to find a good copy of Dha.Ve.Vee’s book at an old book shop in Nanganallur, Chennai?

I decided to buy it not just because of the family connection but also to get a glimpse of his Tamil contributions…



As I was writing the blog I thought to connect with Kannappan, son of Dr. தா. வே. வீராசாமி, who currently lives in Pondicherry. It has been few years since I last met him so wanted to say hi and let him know that I managed to buy a copy of one of his father’s many books. Kannappan uncle was indeed very happy and shared some of his and his sister’s remembrance of their father…


அப்பா இன்று
உங்களது நினைவுநாள்🙏🙏🙏

அவரின் நினைவுகள் சில….

என் அப்பாவைப் பற்றி எழுதுவதென்றால் நிறைய எழுதிக்கொண்டே போகலாம்….

எங்கள் குடும்பதைத் தன் இரு கண்களாக பாவித்தார் என்றால் எங்கள் ஊரான தாராபுரத்தையும் தமிழையும் ஒருசேர நேசித்து சுவாசித்தார்.

சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்தாலும் தாயார் தெய்வானை அம்மாவின் அன்பிலும் அண்ணன் ( எனது வளர்ப்புத் தந்தை) சுந்தரம் அவர்களின் அரவணைப்பிலும் சிறப்பாக வளர்ந்தார்.

1957 ஆம் ஆண்டு எனது தாயார் இராமலட்சுமி அவர்களைக் இனிதே கரம்பிடித்தார்.அப்போது அவரது நண்பர்கள் திருமணத்திற்கு என்ன பரிசு வேண்டும் என்று கேட்டபோது ‘நான் தமிழ் வித்துவானுக்குப் படிக்கப் போகிறேன். அதற்குத் தேவையான புத்தகங்களை வாங்கித் தாருங்கள்’ என்று புத்தகங்களை கேட்டு திருமண பரிசாக வாங்கிக் கொண்டார்.

பின்பு நான் பிறந்த போது இளங்கலை ( B.A.) தமிழும் என் தம்பி பிறந்தபோது முதுகலை (M.A.) தமிழ் படித்து முதல் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றார்.
பின்பு பெரிய புராணத்தை ஆராய்ச்சி செய்து திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். அந்த காலகட்டத்தில் இந்தியாவிலேயே தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் பதினோரு பேர்தான் அதில் எனது தந்தையார் பனிரெண்டாவது நபராக இணைந்து கொண்டார்.

அதற்குப் பின்னரும் கூட அவர் படித்துக் கொண்டேதான் இருந்தார். பணத்துக்காகவோ பட்டத்துக்காகவோ படிக்கவில்லை படிப்பு மீதிருந்த மிகுந்த ஆர்வத்தினால் படித்தார். எனக்கு என் அப்பாவை நினைத்தாலே அவர் புத்தகமும் கையுமாக இருப்பதுதான் கண் முன்னே தோன்றும்.

எனது தாயார், குடும்பத்தை திறம்பட கவனித்துக் கொண்டதால் எனது தந்தை தன் கல்விப்பணியை திறம்படச் செயலாற்ற முடிந்தது.

அவர் மொத்தம் 24 நூல்களை எழுதியுள்ளார். இதில் பொன் குஞ்சு என்னும் ஓரங்க நாடகத்துக்கு சென்னைத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் 1957 ஆம் ஆண்டு முதல் பரிசினைத் தந்தது.
அதோடு 250 தமிழ் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

முனைவர் திருமதி. சோ.பாண்டிமாதேவி அவர்கள் ‘முனைவர் தா. வே.வீராசாமியின் தமிழ்ப் பணிகள்’ என்ற தலைப்பில் எனது தந்தையின் நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வு செய்து எம்ஃபில் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு எனது மகிழ்ச்சி கலந்த வணக்கங்கள்
🙏
எனது தந்தை 11. 7.1997 ஆம் ஆண்டு நான் படித்த பள்ளியில் தமிழில் முதல் மதிப்பெண் வாங்கிய மாணவச் செல்வங்களுக்கு பரிசு வழங்கிவிட்டு அமர்ந்தவர் எனது பள்ளியிலேயே இவ்வுலகிலகைவிட்டு விண்ணுலகம் அடைந்துவிட்டார்.
இதுவே என் தந்தையார் தமிழ் கல்வி மற்றும் எங்களது ஊரான தாராபுரம் மீது அவர் வைத்திருந்த அளவுகடந்த பற்றுக்கு சாட்சியாகும்.

அவரை நினைவு கூறும் இந்நாளில் எங்க குடும்ப உறுப்பினர் அனைவரின் சார்பில் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களைத் தக்க தெரிவித்துக் கொள்கிறேன்.
🙏🙏🙏💐💐💐
நன்றி.
மணி பாரதி (daughter of Dr. தா. வே. வீராசாமி)


Here is Kannappan’s note:

அக்கா, அழகாக எழுதியதியதை வழிமொழிவதுடன் சில:

தாராபுரம் தமிழ்க்கலை மன்றத்தில் மாணிக்கண்ணன் பொருளாளராக இருந்தபோதும் அன்று அவர் வரவில்லை.

கல்வியிலேயே ஊறியவர், உறவினர் யாரு மருகில் இல்லாது கல்விக் கூடத்திலேயே உடல் நீத்தார்.
பேச்சுக்குறிப்பில் கல்வி, ஸ்ரீ அரவிந்தர், அன்னை
ஸ்ரீ அரவிந்தர் பன்னாட்டுக் கல்வி மையம் என குறிப்பெழுதியிருந்தார்.
அதற்கேற்றாற் போல் பேரன், பேத்தி இருவரும் அதே கல்வி மையத்தில் பேரன் கற்றான், பேத்திக் கற்கிறாள்.

நூல்கள் வாங்கித் தந்து என்னைப் படிக்கத் தூண்டினார்.

பெருந்ததகைகள்
தெ.பொ.மீ.,
வ.அய்.சுப்பிரமணியம்,
மறைமலையடிகளின் சீடர் ப.சு.மணியம்,
மு.வ.
ச.வே.சு. தமிழூர்
மதுரை தி.அ.சொக்கலிங்கம், ந.சஞ்சீவி, சிற்பி பாலசுப்பிரமணியம் கி.நாச்சிமுத்து,
கலா தாக்கர் கொண்டல் சு மகாதேவன்,
பொற்கோ போன்ற பெருந்தமிழறிஞர்கள், ஞானபீடப் பரிசு பெற்ற
அகிலன், தகழி சிவசங்கரன் பிள்ளை (மலையாளம் – செம்மீன் என்ற பெருங்கதை எழுதியவர்)
சோமலெ போன்ற எழுத்தாளர்கள், நடிகர் ராஜேஷ் எனப் பலரின் நேரடி அறிமுகம் கிட்டியது. ஆய்வுத் தமிழில் ஆழங்காற்பட்டவர்.

படித்தால் அறிவு.
அதைச் சோதிப்பதே தேர்வு.
அறிவுக்காகப் படித்தால் தேர்வில் வெல்வது உறுதி எனத் தேர்வச்சத்தைப் போக்கியவர்.
நேர்,நேர் தேமா
நிரை நேர் புளிமா கற்றுத் தந்தது
பசுமரத்தாணிபோல் பதிந்தது.


To quote U.Ve.Sa’s words in Tiricirapuram Meenakshisundaram Pillaiavargal Sarithiram (second part, introduction):

உடலை வளர்த்தற்குரிய பலவகையான பொருள் களை வழங்கும் அறங்களினும் உள்ளத்தின் உணர்வு வளர்ச்சிக்குக் காரணமான கல்வியை வழங்கும் வள்ளன்மை சிறந்ததாக ஆன்றோர்களால் எக் காலத்தும் மதிக்கப்படு கின்றது. ஒருமைக்கண் கற்ற கல்வி எழுமையும் பயன் தருதலால் அதனை வழங்கும் பெரியோர்கள் உலகில் உயர்ந்தவர்களாகவும் பேருபகாரிகளாகவும் எண்ணப் படுகின்றனர். அவர்கள் செய்த பேரறத்தின் பயனாகவே கலை வளம் சிறந்து விளங்குகின்றது. மக்களுடைய மன உணர்வைப் பண்படுத்தும் அப்பெரியோர்கள் செய்த அருஞ்செயல்களும் இயற்றிய நூல்களும் எல்லோராலும் போற்றப்பட்டு வருவது யாவரும் அறிந்ததேயாகும். காலதேச வர்த்தமானங்கள் எங்ஙனம் மாறினும் அத்தகைய புலவர் களுடைய புகழ் குன்றாமல் ஒரே நிலைமையில் நிலவி வருகின்றது. சிலருடைய புகழ் வளர்ச்சியுற்றும் வருகின்றது.

டாக்டர் தா .வே. வீராசாமி (1931-1997) too lived such a noble life, நன்றி

🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾


Update (1Aug2023):

At Nanganallur Sri Ram books store, found this found and was pleasantly surprised Dha.Ve.Vee wrote a greeting note…

2 responses to “Remembering Dr. தா. வே. வீராசாமி!”

  1. P. Balasundaram Avatar
    P. Balasundaram

    அழகிய தமிழ். ஐயாவின் தமிழ் புலமை, எழுத்து அனைத்தும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி. 🙏🙏🌹🌹

    Like

  2. […] Remembering Dr. தா. வே. வீராசாமி! […]

    Like

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started