Nam Nattu Vaithiyam by S. Veeraperumal Pillai

சித்த மருத்துவம் என்பது தென்னிந்திய தமிழ் மருத்துவ முறையாகும். பண்டைச் சித்தர்கள், இதனை உருவாக்கித் தந்துள்ளார்கள். சித்தர்கள் தங்கள் அருள் ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாகக் கூறியுள்ளனர்.

‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பது சித்தர் வாக்கு. பசியாற்றும் உணவே, உயிர்காக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. இந்தக் கருத்தாக்கத்தைக் கொண்டு இயங்கிவருவது சித்த மருத்துவம். இயற்கை மருத்துவம் எனச் சொல்லப்படும் சித்த மருத்துவத்தின் மருந்துகளை சித்தர்கள் மூலிகை, தாது மற்றும் சீவப் பொருள்களில் இருந்து தயாரிக்கின்றனர். 

நம் உடலை வாதம் (காற்று), பித்தம் (தீ), கபம் (நீர்) ஆகிய உயிர்த்தாதுக்கள்தான் இயக்குகின்றன என்கின்றனர். இவை அனைத்தும் ஒன்று, அரை, கால் என்கிற மாத்திரை விகிதத்தில் அமைந்திருக்கும். அதன் விகிதம் மாறும்போது நோய் உண்டாகும். நாம் உண்ணும் உணவுகளின் சுவை, அவற்றின் தன்மை, வீரியம் போன்றவற்றைப் பொறுத்தும் நோய் உண்டாகக்கூடும்.

நாடி (Nadi):

Nadi Pariksha is an ancient Ayurvedic technique that can help in identifying the physical, emotional, and spiritual imbalances accurately. Nadi Parikshak inspects your pulse to diagnose the imbalances in your system.

Pulse reading is also one of the most fascinating methods for monitoring the interactions within your mind, body, and soul. This Ayurvedic method can help to recognize the disease processes even before the symptoms are evident.

நாடி பார்க்கும் முறை – நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு? நாடி பிடித்து பார்க்கும் முறைகள். நோய் கண்டறிவதில் முதலாவதாக வருவது நாடி பார்க்கும் முறை.

Check this out: https://hosuronline.com/news-details.php?nid=27&catid=6#

நம் நாட்டு வைத்தியம்

– S.வீரப்பெருமாள் பிள்ளை

சித்த வைத்தியர் வீரப்பெருமாள் பிள்ளை!

திருச்சி மாவட்டம் திருவரங்கத்தை சேர்ந்த புகழ் பெற்ற சித்த மருத்துவரே வீரப்பெருமாள் பிள்ளை.
வெற்றிவேல் சித்த வைத்திய சாலை என்னும் மருத்துவமனை திருவரங்கத்தில்நடத்தி வந்த பரமபரை வைத்தியர்.

நம் நாட்டு வைத்தியம் என்னும் சித்த நூல் மூலம் சித்த மருத்துவ சமூகத்தில் அறியப்படுபவர். இவர் தமது இருப்பது வருட சித்த அனுபவ முறைகளை இந்நூலில் இரண்டு பாகங்களாகவும் எழுதியுள்ளார். இதில் மனித உடலின் அடிப்படை தத்துவத்தில் ஆரம்பித்து சித்த மருத்துவ உடல் செயல் இயல் வரை எளிய தமிழில் விளக்கி இருப்பார். பின் சரக்குகளின் சுத்தி முறை, சூரணம், மாத்திரை, இலேகியம் , பற்பம், செந்தூரம், தைலம், சுண்ணம் என தனித்தனி தலைப்பின் கீழ் எழுதி இருப்பார். பல எளிய சிறந்த மருந்துகளின் அனுபவமாக தொகுத்து எழுதியுள்ளார்.

இவர் மேலும் தமிழ் நாட்டு இலகு வைத்தியம், தமிழ் நாட்டு பச்சிலை வைத்தியம்,சித்த வைத்திய திரட்டு முதலிய நூல்களையும் எழுதி உள்ளார்.

நன்றி :- Manickavasagam Rangaraju 
Source: https://www.facebook.com/groups/NaattuMarunthu/permalink/2373069679604881/

Preface

Thiruvalluvar Arul Vakku:

Contents of the book:

If you would like to see any of the topics, please let me know, I will share the details...

Thirumular Arul Vakku:

One response to “Nam Nattu Vaithiyam by S. Veeraperumal Pillai”

  1. அருமையான விவரங்கள்.
    நன்றி.
    மேலும் அறிய ஆவலைத் தூண்டுவதாக உள்ளது.

    Like

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started